Skip to content

சாந்தோம் சர்ச் வரலாறு

இதுதான் சாந்தோம் சர்ச்சில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளாக தமிழக அரசு தொல்லியல்துறை பதிப்பித்திருப்பது.

தேவாலயத்தின் எந்த இடத்தில் இருந்து அவற்றை கண்டெடுத்தோம் என தெளிவாக பதிவு செய்துள்ளனர்.

இவற்றில் ‘சிவபாதசேகரன்‘ மாமன்னர் ராஜராஜசோழன் மெய்கீர்த்தியான, “திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை” என்பதுடன் துவங்கும் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இதன் காலம் பொயு 10 – 11 ம் நூற்றாண்டை சேர்ந்தது.

அதே போல “திருமன்னி வளர இரு நில மடந்தையும், போர் செயப்பாவையும் சீர்தனிச்செல்வியும்” என்று துவங்கும் சிவசரணசேகரனான மாமன்னர் ராஜேந்திரசோழன் மெய்கீர்த்தி கல்வெட்டும் கிடைத்துள்ளது. இதன் காலம் பொயு 11 ம் நூற்றாண்டாகும்.

பூமாது புணரப் புவிமாது வளர
நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
தன்னிரு பதமலர் மன்னவர் சூட” என்று துவங்கும் விக்ரமசோழனின் பொயு 12 ம் நூற்றாண்டு கல்வெட்டும்,அதே காலத்தை சேர்ந்த ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டும் கிடைத்துள்ளது.

அதாவது, தற்போது உள்ள கபாலீஸ்வரர் கோவில் இரண்டாவது கோவில் ஆகும், இதற்கு முன் இருந்த கோவிலை 1566ல் போர்த்துகீசிய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இடித்திருக்கிறார்கள்.

அந்த இடத்தில் தற்போது சாந்தோம் தேவாலயம் உள்ளது. அதாவது சிவன் கோவிலை இடித்து விட்டு அங்கே சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது. அதனால் தான் அதன் சுற்று சுவரில் நமக்கு இத்தனை கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன.

இதை திருவள்ளுவரை கிறித்தவராக நிறுவத் துடித்த பாதிரியார் தெய்வநாயகமும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதற்கான வீடியோ ஆதாரம் தந்துள்ளோம்.

https://videopress.com/v/FnI1tMCq

ஆக அரசின் தொல்லியல் துறையும், கிறிஸ்தவ பாதிரி தெய்வநாயகம் தந்த ஒப்புதல் வரலாறும் சொல்வது, நமக்கு நம் வரலாறு தெரியாமல் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்குச் சாட்சிகளாகும்.

இதையெல்லாம் மறைத்து ஈசனும் இயேசுவுமொன்று, சைவ சித்தாந்த நெறி கிறித்தவத்திலிருந்து தோன்றியது என்றுப் பிதற்றுவதென்பது வன்மமானது. இதைச் செய்யும் திருமாவளவன் போன்றவர்கள் தமிழகத்துக்குச் சாபக்கேடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *